2025 மே 07, புதன்கிழமை

கடலில் குளிக்கச் சென்ற சிறுவன் மாயம்

Thipaan   / 2015 நவம்பர் 07 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா

காத்தான்குடி ஆறாம் குறிச்சியிலுள்ள கடலில் குளிக்கச் சென்ற சிறுவனொருவன் காணாமற்போயுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (07) சனிக்கிழமை முற்பகல் 11மணியவில் இளைஞர்கள் 10பேர் கடலுக்கு குளிக்கச் சென்றுள்ளனர்.

இதன் போது காத்தான்குடி ஆறாம் குறிச்சி ஏ.எல்.எஸ்.மாவத்தையிலுள்ள அப்துல் அலியார் சம்ஸாத் (வயது 15) எனும் சிறுவன் குளித்துக் கொண்டிருந்த போது கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளான்.

குறித்த சிறுவனைத் தேடும் நடவடிக்கை இடம் பெற்றுவருவதாகவும் இது தொடர்பான விசாரணைகளை

மேற்கொண்டுவருவதாகவும் காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X