2025 மே 07, புதன்கிழமை

கடலில் மூழ்கி சிறுவன் பலி

Niroshini   / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

மன்னார், பனங்கொட்டிகொட்டு கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிப்பிள்ளை விஜயன் அசன்சன் என்ற 4 வயது சிறுவன், மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி கடலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) மாலை மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மன்னாரிலிருந்து கல்முனை சொறிக்கல்முனை தேவாலய திருவிழாவுக்காக குறித்த சிறுவன் தனது உறவினர்களுடன் வருகை தந்துள்ளார்.

இதன்போது,பொழுதைக்கழிப்பதற்காக கல்லடி கடலோரம் விளையாடிக்கொண்டிருந்தபோதே திடீரென அலையில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X