2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கடலில் மூழ்கிய மாணவர்கள்: ஒருவர் மீட்பு; இருவரை காணவில்லை

George   / 2016 நவம்பர் 26 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ், எம்.எஸ்.எம்.நூர்தீன்
 
"மட்டக்களப்பு ஏறாவூர் புன்னக்குடா கடலில் வெள்ளிக்கிழமை(25) மாலை நீராடச் சென்ற இரு இளைஞர்கள், நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். மற்றுமொருவர் காப்பாற்றப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்' என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூரிலுள்ள தேசிய பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கலை பரிவில் முதலாம் வருடம் கல்வி பயிலும் மாணவர்கள் குழு, புன்னக்குடா கடலில் நீராடச் சென்ற வேளை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்

இச்சம்பவத்தில் பன்குடாவெளி தளவாய் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் சிவதர்சன், ஏறாவூரைச் சேர்ந்த எப்.பர்ஹான், ஆகிய இரு மாணவர்களும் காணாமல் போயுள்ளனர்.

ஏறாவூரைச் சேர்ந்த சேகுதாவூத் அக்ரம், என்ற மாணவன் மயக்கமடைந்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார். காணாமல் போன இருவரையும் தேடும் பணியில் பொதுமக்களும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X