2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கடலில் நீராடச் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

Editorial   / 2019 மார்ச் 20 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்

கடலில் நீராடச் சென்ற குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில், நேற்று (19) மாலை மீட்கப்பட்டதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

புதிய காத்தான்குடி, ஏத்துக்கால் கடற்கரையோரத்தில் மீட்கப்பட்ட இச்சடலம், ஆரையம்பதி - 02, செல்வா நகரைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான பூபாலப்பிள்ளை லோகேஸ்வரன் (வயது 49) என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஏத்துக்கால் கடற்கரையோரத்தில் கரையொதுங்கிய சடலத்தை அவதானித்த மீனவர்களும் பொதுமக்களும், அது தொடர்பாக பொலிஸாருக்கும் கிராம சேவகருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டு, சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, காத்தான்குடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X