2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கடல் கொந்தளிப்பு; மீன்பிடி பாதிப்பு

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2017 நவம்பர் 25 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

மீனவர்களைக் கடலுக்குச் செல்ல வேண்டாமென, மாவட்ட வானிலை அவதான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

புதியகாத்தான்குடி, ஏத்துக்கால, பாலமுனை, புநொச்சிமுனை, புன்னைக்குடா, வாகரை உட்பட பல கரையோரப் பிரதேச மீனவர்களின் வாழ்வாதாரம், இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் தமது படகுகள் மற்றும் மீன்பிடிக் கலன்களை கரையிலிருந்து நீண்டதூரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

இம்மாவட்டத்தில் சுமார் 23 ஆயிரம் குடும்பங்கள், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளதென, மாவட்ட கடற்றொழில் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் ருக்சான் குறூஸ் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X