Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
எம்.எம்.அஹமட் அனாம் / 2017 செப்டெம்பர் 18 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட முச்சக்கர வண்டி, மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி ரயிலில் மோதியதில், குறித்த முச்சக்கர வண்டி சேதமடைந்துள்ளதாக, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
வாழைச்சேனை ரயில் நிலையத்துக்கும் புணாணை ரயில் நிலையத்துக்கும் இடைப்பட்ட மஜ்மா நகர் பாதுகாப்பற்ற ரயில் கடவையால் வாழைச்சேனையில் இருந்து மஜ்மா நகர் கிராமத்துக்குச் சென்ற முச்சக்கர வண்டியே, நேற்றிரவு 9.15 மணியளவில் மோதுண்டுள்ளது.
முச்சக்கர வண்டியில் சென்ற சாரதியுடன் நால்வர் எவ்விதக் காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளனர் என்பதுடன், முச்சக்கர வண்டி நீண்ட தூரம் தூக்கி எறியப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .