2025 மே 08, வியாழக்கிழமை

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியோருக்கு எதிராக நடவடிக்கை

Editorial   / 2019 டிசெம்பர் 01 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கொண்டே பொது வெளிகளில் கட்சியைப் பிழையாக விமர்சனம் செய்தமை மற்றும் தற்போது நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் தீர்மானத்தை மீறிச் செயற்பட்டமை

தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரில் இருந்து கொண்டே கட்சிக்கு எதிராகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் உட்பட உள்ளூராட்சி

மன்றங்களின் உறுப்பினர்கள் எழுவர் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அங்கத்தவர் ஒருவருக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் அவர் சார்ந்திருந்த கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி அவர் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையைத் தொடர்பில் தனக்கு அறிவிக்கப்பட்டதை யடுத்து

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்புக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து அவர் விலக்கப்பட்டார். அவரின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தையும் இழக்கச் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் கட்சியின் தீர்மானத்தை மீறிச் செயற்பட்ட யாழ்ப்பாணம் நெடுந்தீவுப் பிரதேச சபைத் தவிசாளர்  பிலிப் பற்றிக் ரோசான், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களான

இரா.அசோக், யூசைமுத்து பிலிப் மற்றும் மண்முனைப் பற்றுப் பிரதேச சபையின் உறுப்பினர் தோமஸ் சுரேந்தர் மற்றும் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர்களான வ.சந்திரவர்ணன், சி.சிவானந்தன்,

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினரான குஞ்சித்தம்பி ஏகாம்பரநாதன் போன்றோர்

தொடர்பில் கடிதங்கள் அவருக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X