Editorial / 2019 ஏப்ரல் 04 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன், ஏ.எச்.ஏ. ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரளக்குளம் காட்டுப் பகுதிக்கு, சட்டவிரோதக் கட்டுத்துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவன் வேட்டைக்குச் சென்ற நிலையில், அவர் கொண்டுசென்ற துப்பாக்கி வெடித்ததில், அந்த இளைஞன் பலியாகியுள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முறக்கொட்டான்சேனையைச் சேர்ந்த கணேசமூர்த்தி கருணாகரன் (வயது 25) எனும் இளைஞனே, நேற்று (03) இரவு இவ்வாறு பலியாகியுள்ளாரென, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை, ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago