ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டிய, கித்துள் வனப்பகுதிக்குள் கட்டுத்துவக்குத் தவறுதலாக வெடித்ததில் சிறுவனொருவன் பலியான சம்பவத்தோடு தொடர்புபட்டதில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும், இம்மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
இம்மூவரும், ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி வி.தியாகேஸ்வரன் முன்னிலையில் நேற்று (29) கரடியனாறு பொலிஸாரால் நிறுத்தப்பட்டபோது, இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கித்துள் கிராமத்தைச் சேர்ந்தவர்களான சௌந்தரராஜன் இந்துஜன் (வயது 13), களுமாத்தையா கலாரூபன் (வயது 21), கிருஷ்ணபிள்ளை உதயகுமார் (வயது 25) ஆகியோரே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை (28) இடம்பெற்ற மேற்படி சம்பவத்தில், கித்துள் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்தன் தனு (வயது 14 ) என்ற சிறுவன் பலியாகியிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .