Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 25 , மு.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் வாழ்வின் எழுச்சி திணைக்களத்தினால் நடத்தப்பட்ட உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் நேற்று வியாழக்கிழமை வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலய மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இக்கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெறும்.
சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சின் வவுணதீவு பிரதேச செயலக வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்கள பிரிவினால் இது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
'முத்தான வியர்வை -2015' எனும் தொனிப்பொருளுக்கமைய வாழ்வின் எழுச்சி பயனாளிகளின் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சிக்காகவும் விற்பனைக்காகவும் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட வாழ்வின் எழுச்சி பணிப்பாளர் பி.குணரெட்ணம் வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், உதவி பிரதேச செயலாளாளர் எஸ்.ராஜ்பாபு, உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரி.நிர்மலராஜ் உட்பட அதிகாதிகளும், வாழ்வின் எழுச்சி திணைக்கள முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோரும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
35 minute ago
49 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
49 minute ago
4 hours ago
5 hours ago