2025 ஜூலை 05, சனிக்கிழமை

கணினி வன்பொருள் பயிற்சி நெறி

Niroshini   / 2015 நவம்பர் 03 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை களுதாவளையில் விதாதா வள நிலையத்தில் கணினி வன்பொருள் பயிற்சி நெறி ஆரம்பமாகியது.

மூன்று தினங்கள் நடைபெறவுள்ள இப் பயிற்சி நெறியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இப்பயிற்சி நெறியில் மண்முனை தென் எருவில் பற்று கிராம சேவகர் பிரிவில் உள்ள இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டனர்.

வேலையற்ற நிலையில் உள்ள இளைஞர்கள் தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளும் வகையில் இவ்வாறான பயிற்சி நெறிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக களுதாவளையில் விதாதா வள நிலையத்தின் பொறுப்பதிகாரி எஸ்.தர்சன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .