2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கணக்காளராக பணியாற்றிய பெண் வீட்டிலிருந்து சடலமாக மீட்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜூலை 10 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர் பொலிஸ் பிரிவு, மயிலம்பாவெளி கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து குடும்பப் பெண்ணொருவரின் சடலத்தை மீட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மயிலம்பாவெளிக் கிராமத்தைச் சேர்ந்த திருமதி தயாநிதி  வசந்தகுமார்  (வயது 35) எனும் குடும்பப் பெண்ணின் சடலமே, நேற்று (09) மீட்கப்பட்டுள்ளது.

இவர் செங்கலடியிலுள்ள நகைக் கடையொன்றில் கணக்காளராக வேலை பார்த்து வந்துள்ளார் என்பதுடன், இவருக்கு 8ஆம் தரத்தில் கற்கும் ஒரு பெண் பிள்ளையும் உண்டு என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் உடற்கூறாய்வுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X