Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 20 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கண்ணகி கிராம மக்கள் இன்று(20) முற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள குப்பை மேட்டில் குப்பை கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிதே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியில் டயர்களை எரித்து தங்களது எதிர்ப்பை வெளியிட்டதுடன், குப்பையுடன் சென்ற பிரதேச சபை வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
குப்பைகள் கொட்டப்படுவதன் காரணமாக காட்டு யானைகள் தினமும் அதனை உட்கொள்ள கிராமத்துக்குள் உட்புகுவதாகவும் இதனால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் பிரதேச பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே யானைகள் கிராமத்துக்குள் நுழைவதை தடுக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், குப்பை மேட்டிற்கான தீர்வை பெற்றுத்தருமாறும் கோரியே அவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 May 2025
20 May 2025
20 May 2025