2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கத்திக் குத்துக்கிலக்காகி ஒருவர் படுகொலை

Editorial   / 2018 மார்ச் 03 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல், கனகராசா  சரவணன்

 

வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வாபுரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை (02) இரவு இடம்பெற்ற தகராறில் ஒருவர்   படுகொலை செய்யப்பட்டுள்ளதாக, வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

 

செல்வாபுரம் - இரண்டாம் வட்டாரத்தைச் சேர்ந்த மயில்வாகனம் கமலேஸ்வரன் என்பவரே, படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சடலம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

 இச்சம்பவம் தொடர்பில் அதே கிராமத்தைச் சேர்ந்த 24 வயதுடைய கேதீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X