Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
வா.கிருஸ்ணா / 2018 ஜனவரி 18 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிமுன்மாரி பிரதேச மக்கள், இன்று (18) காலை வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவடிமுன்மாரி பிரதான வீதியானது மணல் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களால் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருவதாகவும் அதனை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தியுமே இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மணல் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களை மறித்து வீதிக்கு நடுவே நின்று ஆர்ப்பாட்டம் செய்த மக்கள், தமது பகுதிகளில் உள்ள மண்ணை வேறு பகுதிக்கு கொண்டுசெல்வதை நிறுத்துமாறு, இதன்போது வேண்டுகோள் விடுத்தனர்.
மாவடிமுன்மாரி பகுதியில் மணல் ஏற்றுவது நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் மணல் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கப்படடுள்ளதாகவும் இதன் காரணமாக தமது வளங்கள் சுரண்டப்படுவதுடன், வீதிகளும் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்வதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
இதன்போது, ஸ்தலத்துக்கு வருகைதந்த பட்டிப்பளை பிரதேச செயலக பிரதேச செயலாளர் திருமதி தட்சனகௌரி தினேஸ் மற்றும் பட்டிப்பளை பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தினர்.
இதையடுத்து, மக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக மண் ஏற்றுவதை உடடினாயாக நிறுத்துமாறும் குறித்த வீதியின் கனரக வாகனத்தில் மண் கொண்டு செல்வதை நிறுத்துமாறும் பிரதேச செயலாளர் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது போராட்டத்தைக் கைவிட்டதுடன், தமது பகுதிக்குரிய மண்ணை வேறு பகுதிக்கு கொண்டுச்செல்லும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்துமாறு கோரும் கடிதம் ஒன்றும், பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
37 minute ago
1 hours ago
1 hours ago