2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கப்பம் பெற முயற்சித்தவர் கைது

Niroshini   / 2016 டிசெம்பர் 02 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு - வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேனியில் தந்தை, மகள் இருவரை கடத்தி கப்பம் பெற முயற்சித்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கோவில்குடியிருப்பு - பனிச்சங்கேணி - வாகரையில் வசிக்கு செல்வநாயகம் துஷ்யந்தன் (28) என்பவரை ஐந்து பேர் சேர்ந்து, நேற்று வியாழக்கிழமை கடத்திச் சென்று, பணிச்சங்கேணி காட்டுப்பகுதி ஒன்றில் கட்டிவைத்து விட்டு துஷயந்தனின் அப்பாவுக்கு கையடக்க தொலைபேசி மூலம் 15 இலட்சம் ரூபாய் தருமாறு கப்பம் கோரியுள்ளனர்.

இதையடுத்து, ஐந்து இலட்சம் ரூபாயும் அந்த இடத்துக்கு சென்ற துஷ்யந்தனின் தந்தை செல்வநாயகம் என்பவரையும் கடத்தி மரத்தில் கட்டி வைத்து விட்டு மேலும் ஐந்து இலட்சம் ரூபாய் தருமாறு கப்பம் கோரியுள்ளனர்.

இந்த விடயம் வாகரை பொலிஸாருக்கும் அப்பகுதி பொதுமக்களுக்கும் தெரியவந்ததையடுத்து, வாகரை பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து இவர்களை தேடிக்கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பொன்னம்பளம் உதயநாதன் என்பவரை கைது செய்துள்ளதாகவும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நான்கு பேர் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

வெள்ளக்குட்டி தர்மகுமார் என்பவரின் தலைமையிலே இந்தக் கடத்தல் சம்பவம் இடம்பெற்றிருப்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X