Editorial / 2019 ஓகஸ்ட் 04 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாசலில் கம்பெரலிய திட்டத்தின் கீழ், நிர்மாணிக்கப்பட்ட ஒன்று கூடல் மண்டபம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவினால் திறந்து வைக்கப்பட்டது. இவ்வைபவத்தில், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன், பள்ளிவாயலின் நிருவாகிகளான சட்டத்தரணி ஏ.உவைஸ், கே.எல்.எம்.கலீல், எம்.எச்.எம்.இக்பால் உட்பட நிருவாகிகள், முக்கியஸ்தர்கள், உலமாக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாசல் தலைவர் எச்.எம்.ஸியாம் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் சகல மத ஸ்தானங்களுக்கும் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹீர் மௌலானா தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .