2025 மே 10, சனிக்கிழமை

கம்பெரலிய திட்டத்தின்கீழ் தேவாலயம் புனரமைப்பு

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2019 ஓகஸ்ட் 13 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் நிதியொதுக்கீட்டின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் புனரமைப்பு, நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, மட்டக்களப்பு, மாமாங்கம் சகாயபுரம் தூய சதா சகாய அன்னை தேவாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட  தேவாலயமுகப்பு மண்டபம், இன்று (13) திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  ஞா .ஸ்ரீநேசனின்  கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் இதற்கான நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   

ஆலய பங்குத் தந்தை ஆர் .திருச்செல்வம் தலைமையில் நடைபெற்ற இத்திறப்பு விழா நிகழ்வில், பிரதம விருந்தினராக  நாடாளுமன்ற உறுப்பினர்  ஞா .ஸ்ரீநேசன் கலந்துகொண்டு திறந்துவைத்தார் .

இந்நிகழ்வில், மாமாங்கம் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்  திருமதி வை.கலைச்செல்வி, மாநகர சபை உறுப்பினர்களான பி.ரூபராஜன், டி.மதன்,  நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் பிரேம், அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்த் மற்றும் பங்கு மக்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X