Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்
மட்டக்களப்பில் கிங்சிலி இராசநாயகத்தின் படுகொலை சம்பந்தமாக விசாரணைசெய்து சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எந்தமாற்றுக்கருத்தும் இடமில்லை.அதற்காக என்னை விசாரிக்க வேண்டும் என்று வினாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா கூறுவது அவரின் கடந்த கால துரோகத்தனத்தை மறைக்கும் அப்பட்டமான குரோத எண்ணமே ஆகும் என முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
ஊடகங்களில் கருணா, கிங்சிலி இராசநாயகம் கொலை தொடர்பாக அரியநேத்திரனிடம் விசாரிக்க வேண்டும் என கூறிய கருத்து தொடர்பில் இன்று வியாழக்கிழமை ஊடகத்துக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
மட்டக்களப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு நான் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு 36,604 வாக்குகளை பெற்றேன். கிங்சிலி இராசநாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதாக தேர்தல் ஆணையாளரால் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டு அந்த இடத்துக்கு நான் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்தேன்.
கிங்சிலி இராசநாயகம் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னரே நான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்து கொண்டேன்.கிங்சிலி இராசநாயகம் கொலை செய்யப்பட்ட பின்பு நான் நாடாளுமன்ற உறுப்பினரானேன் என யாராவது கருதுவார்களானால் அது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடுச்சுக் போடும் செயலாகும் என்றார்.
மேலும்,கிங்சிலி இராசநாயகம் படுகொலை சம்மந்தமாக விசாரிக்கப்பட்டு இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருப்பினும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் எனக்கு இல்லை உண்மை கண்டறியப்பட வேண்டியது அரசின் கடமையாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago