Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 05 , மு.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைவு பற்றி மதத் தலைவர்களின் ஆசிச் செய்தியுடன், பொதுமக்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கையும் 'உத்தேச புதிய அரசியல் யாப்பும் இனப் பிரச்சினைத் தீர்வுக்கான முன்மொழிவுகளும்' எனும் தலைப்பில் சமகால சூழ்நிலை பற்றிய கருத்துப்பகிர்வுக் களமும்
நடைபெறவுள்ளன.
மட்டக்களப்பு, தாண்டவன்வெளி வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் த.வசந்தராஜா தலைமையில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணி முதல் நடைபெறவுள்ள தெளிவூட்டும் நடவடிக்கையில் பொதுமக்கள், நலன்விரும்பிகள், அரசியல்த் தலைவர்கள், ஆர்வமுடையவர்கள், அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கருத்துப்பகிர்வுக் களம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03 மணிக்கு மட்டக்களப்பு புளியந்தீவு சார்ஸள்ஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட சமூக பொருளாதார கல்வி, அரசியல் சுற்றுப்புறச் சூழல், அபிருத்தி அமையம் ஏற்பாடு செய்துள்ள இக்கருத்துப் பகிர்வுக் களத்துக்கு பொதுமக்கள், நலன்விரும்பிகள் உட்பட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .