Niroshini / 2020 ஒக்டோபர் 28 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு – கரடியனாறு, கரடியன்குளம் பிரதேத்தில் உள்ள மக்கள் குடியிருப்புகள், விவசாய காணிகளை உள்ளடக்கிய காணிகளை, கரடியனாறு விவசாயப் பண்ணைக்குச் சொந்தமானது எனத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட அளவீட்டு பணிகள், நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் தலையீட்டால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கரடியன்குளம் பிரதேசத்தில், சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள், காலாகாலமாக அப்பிரதேசத்தில் விவசாத்தை மேற்கொண்டு குடியிருந்து வருகின்றன.
அந்தக் காணிகளுக்கான உறுதிப்பத்திரம், சுவர்ணபூமி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பத்திரங்கள் என்பன இருக்கும் நிலையில், கரடியனாறு விவசாயப் பண்ணை அதிகாரிகளால், அக்காணிகள், விவசாயப் பண்ணைக்குரியது என்று தெரிவித்து, நேற்று (27) அங்கு அளவீட்டு பணிகள் முன்னெடுக்க முயற்சிக்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் அப்பிரதேச மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றதையடுத்து, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமாருடன் ஸ்தலத்துக்கு விரைந்த கோவிந்த கருணாகரன் எம்.பி, பிரதேச மக்களுடன் ஆலோசித்து, உரிய அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.
இதையடுத்து, அளவீட்டு பணிகள் உடன் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago