2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

கருணா அம்மானின் வேலியில் சிக்கி காவலாளி பலி

Freelancer   / 2023 பெப்ரவரி 14 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம்  

கருணா அம்மான் என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு சொந்தமான வயல் காணியில் இடப்பட்டிருந்த சட்டவிரோத மின்வேலியில் சிக்கி காவலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டது.

வனவிலங்குகளிடமிருந்து நெற்செய்கையை பாதுகாக்க மட்டக்களப்பு - தொப்பிகலயில் உள்ள வயல் காணியில் சட்டவிரோதமாக போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு சொந்தமான வயல் காணியிலேயே இந்த சட்டவிரோத மின்வேலி இடப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர். எனினும், சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

சட்டவிரோத மின்வேலியில் சிக்கி மணிவாசகர் நகரை சேர்ந்த 53 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பதுடன் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் இன்று (14) காலை கையளிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X