Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 06 , பி.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, எஸ்.பாக்கியநாதன், ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில், சிலர் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனரென, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பி.பிரசாந்தன் தெரிவித்தார்.
விளக்கமறிலில் வைக்கப்பட்டிருக்கும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை, மட்டக்களப்பு தேர்தல் திணைக்களத்தில் நேற்று செலுத்தியது.
கட்சியின் பொதுச் செயலாளர் பி. பிரசாந்தன், கட்சியின் பிரதித் தலைவர் க.யோகவேல், மகளிர் அணித் தலைவி திருமதி செல்வி மனோகர் உட்பட கட்சி ஆதரவாளர்கள் சகிதம் சென்று கட்டுப்பணத்தைச் செலுத்தினர்.
மாவட்ட தேர்தல் ஆணையாளர் எஸ்.சுசிலனிடம் தமது கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர், ஊடகவியலாளர்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரசாந்தன் தெரிவித்ததாவது,
“அந்தக் கட்சியுடன் இணையப் போகின்றோம் இந்தக் கட்சியுடன் இணையப் போகின்றோம் என கட்சியின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
“அனைத்தையும் தாண்டி, இம்முறை கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் படகு சின்னத்தில் போட்டியிடவுள்ளோம். கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்கள், தங்களது பகுதிகளை தாங்களே ஆளும் அதிகாரத்தைக் கொண்டதாக இருப்பார்கள்.
“தமிழர்களின் ஆணையைப் பெற்றவர்கள் தமிழர்களின் இருப்பைத் தாரைவார்த்துக் கொடுத்துள்ளனர். கிழக்கில் தமிழர்களின் இருப்பு பாதுகாக்கப்படவேண்டுமானால், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு பின்னால் தமிழ் மக்கள் அணி திரளவேண்டும்” என்றார்.
மட்டக்களப்பு மாநகர சபை உட்பட மாவட்டத்தின் 9 உள்ளூராட்சி சபைகளிலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
2 hours ago
4 hours ago