Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 ஜனவரி 23 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
கற்பிட்டி சின்னக்குடியிருப்பு கடற்கரை பிரதேசத்தில் டொல்பின் இனத்தைச் சேர்ந்த மீன் ஒன்று இறந்த நிலையில் நேற்று (22) கரை ஒதுங்கியுள்ளது.
இவ்வாறு, இறந்த நிலையில் கரையொதெங்கிய மீன் தொடர்பில் அந்த பிரதேச மீனவர்கள் கற்பிட்டி நகரில் உள்ள தேசிய நீரியல்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி (நாரா) அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த நாரா நிறுவன அதிகாரிகள் குறித்த மீனை மேலதிக பரிசோதனைகளுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
இவ்வாறு எடுத்துச் செல்லப்பட்ட குறித்த மீனை, பரிசோதனைக்காக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக நாரா நிறுவன அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
அத்துடன், கரையொதுங்கியுள்ளதாக மீனவர்களினால் ௯றப்படும் குறித்த டொல்பின் இனத்தைச் சேர்ந்த மீன் தொடர்பில் தமக்கு சந்தேகம் உள்ளதாகவும் அவர் ௯றினார்.
இறந்து கரையொதுங்கிய குறித்த மீனுக்கு எந்தவிதமான காயங்களும் ஏற்பட்டிருக்கவில்லை.
தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட மீனவர்களின் வலைகளில் சிக்கியே குறித்த மீன் உயிரிழந்திருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
இதேவேளை, குறித்த இனத்தைச் சேர்ந்த மீன்கள் மூச்செடுப்பதற்காக கடல் நீருக்கு மேல் வரை வந்து செல்வது வழக்கமாகும்.
இலங்கையில் மிகவும் அரிதான இவ்வாறான மீன்கள் வெளியே வருவதனை பார்வையிடுவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கற்பிட்டி பிரதேசத்திற்கு வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
39 minute ago
1 hours ago
1 hours ago