2025 மே 19, திங்கட்கிழமை

கர்ப்பிணித்தாய்மார்களுக்கு போசாக்குப் பொதிகள் வழங்கி வைப்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஜனவரி 25 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடியிலுள்ள கர்ப்பிணித்தாய்மார்களுக்கு போசாக்குப் பொதிகள், நேற்று (24) பு வழங்கி வைக்கப்பட்டன.

காத்தான்குடி சுகாதார வைத்தியர் அலுவலகத்தில் வைத்து தெரிவுசெய்யப்பட்ட 40 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இந்த போசாக்குப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

 மெலிபன் பிஸ்கட் உற்பத்தி நிறுவனத்தின் காலம் சென்ற நிறுவுனரின் சிரார்த்த தினத்தையொட்டி, இந்த போசாக்குப் பொதிகள் வழங்கப்பட்டன.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் யு.எல்.நசிர்தீன், மெலிபன் பிஸ்கட் உற்பத்தி நிறுவனத்தின் தேசிய விற்பனை முகாமையாளர் எஸ்.தம்மிக ஜெயசிங்க, வடக்கு, கிழக்கு முகாமையாளர் பி.பாலித்த சுரேஸ், மட்டக்களப்பு முகாமையாளர் ஏ.எம்.அம்ஜத், மட்டக்களப்பு விற்பனை முகாமையாளர் யு.கஸ்ஸாலி, காத்தான்குடிக்கான விற்பனை பிரதிநிதியும் ஹோம் பூட் சிற்றியின் முகாமைத்துவ பணிப்பாளருமான எம்.எம்.ஏ.பைரூஸ் உட்பட பொதுச் சுகாதார பரிசோதர் உட்பட தாதியர்களும் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X