Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 மே 31 , பி.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்
மறைந்த அமைச்சரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமானுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கிழக்கு மாகாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் இன்று (31) கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.
அத்துடன், அஞ்சலி பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டு, துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது.
மே மாதம் 26ஆம் திகதியன்று திடீர் மரணம் எய்திய அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சிலி செலுத்தினர்.
அவ்வகையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கத்தின் வழிகாட்டலில் அன்னாருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக அஞ்சலிப் பதாதைகள், மட்டக்களப்பு நகரிலும் தமிழரசுக் கட்சி மட்டக்களப்புக் காரியாலயத்திலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .