Editorial / 2019 செப்டெம்பர் 11 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம், ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பில் கடமையாற்றும் இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக சேறு பூசி வரும் நடவடிக்கையைக் கண்டித்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் அனைத்து இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்களும் இன்று (11) நடத்தவிருந்த கறுப்புப் பட்டிக் கண்டனப் போராட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக, இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையினர் தெரிவித்தனர்.
பிற்போடப்பட்டுள்ள தமது இந்தப் போராட்டம், எதிர்வரும் புதன்கிழமை (18) நடைபெறவுள்ளதாக, அச்சங்கத்தின் மாவட்ட நிர்வாக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
தங்களின் இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்கம் நாடுபூராகவும் சுகயீன லீவுப் போராட்டத்தில் குதித்துள்ளதால் மட்டக்களப்பில் நடத்தவிருந்த கறுப்புப்பட்டி கண்டனப் போராட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .