2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

வா.கிருஸ்ணா   / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திராய்மடு சுவிஸ் கிராமத்தில் உள்ள வறிய குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, நேற்று (21) மாலை நடைபெற்றது.

திராய்மடு சுவிஸ் கிராமத்தில் தெரிவுசெய்யப்பட்ட வறிய நிலையில் உள்ள 50 மாணவர்களுக்கு, சுவிஸ் உதயம் அமைப்பைச் சேர்ந்த சின்னத்தம்பி வரதராஜனின் உதவியுடன், இந்தக் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணித் தலைவியும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான திருமதி செல்வி மனோகர் கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X