2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கலை நிகழ்வும் உணவுகள் விற்பனையும்

Niroshini   / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில்'கலையும் சுவையும்' எனும் தொனிப்பொருளிலான கலை நிகழ்வும் உணவு விற்பனையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நகர நீரூற்றுப் பூங்கா வளாகத்தில் நடைபெற்றன.

மாநகரசபை ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,பாரம்பரிய உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டதுடன் பாரம்பரிய கலை கலாசார நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரின்ஸ் காசிநாதர்,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. தவராஜா, மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.பாஸ்கரன், கிழக்கு பல்கலைக்கழக  அழகியற் கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X