2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

கல்லடி பொதுச் சந்தையில் எவருக்கும் தொற்றில்லை

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 13 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கல்லடி பொதுச் சந்தை வியாபாரிகள் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லையென, கல்லடி பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ்.அமிர்தாப் தெரிவித்தார்.

கல்லடி பொதுச் சந்தை வியாபாரிகள் மற்றும் தனிப்படுத்தப்பட்டுள்ளோரின் குடும்ப உறவினர்கள் 95 பேரிடம், கல்லடி பொது சந்தைக் கட்டடத்தில் இன்று (13) அன்டிஜன் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்போது எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனவும், அவர் தெரிவித்தார்.

கல்லடி பொது சுகாதார பரிசோதகர் எஸ்.அமிர்தாப், நாவற்குடா பொது சுகாதார பரிசோதகர் எஸ்.தீரகுமாரன், கோட்டைமுனை பொது சுகாதாரப் பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் ஆகியோர் மேற்படி அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X