Princiya Dixci / 2020 ஒக்டோபர் 06 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், வ.சக்தி
மட்டக்களப்பு, கல்லடி, இக்னேசியஸ் விளையாட்டு மைதானத்துக்கு அருகிலுள்ள களப்பில், பழுதடைந்த நிலையில் ஆணொருவரின் சடலம், இன்று (06) மீட்கப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, சிவப்பு நிற ரி-சேட்டும் நீல நிற டெனிம் ரவுசரும் அணிந்திருந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
9 minute ago
16 minute ago
41 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
16 minute ago
41 minute ago
44 minute ago