2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

களுதாவளையில் விழிப்புணர்வு ஊர்வலம்

Niroshini   / 2015 நவம்பர் 05 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்றுநோயிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் முகமாக  மட்டக்களப்பு மாவட்ட எகட் கரித்தாஸ் மற்றும் மாவட்ட விவசாய திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று வியாழக்கிழமை  காலை மட்டக்களப்பு,களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட களுதாவளை பகுதியில் நடைபெற்றது.

இதன்போது,சேதனைப்பசளையை பயன்படுத்தி விவசாய நடவடிக்கையினை மேற்கொள்வது குறித்தும் விவசாய நடவடிக்கைகளுக்கு இரசாயனங்கள் பயன்படுத்துவதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் வீட்டுதோட்ட செய்கை தொடர்பிலும் விழிப்புணர்வூட்டப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட எகட் கரித்தாஸ் இயக்குனர் அருட்தந்தை ஜிரோன் டிலிமா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் எம்.கோபாலரட்னம்,மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் மங்களேஸ்வரி சிவஞானம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஊர்வலத்தினை தொடர்ந்து களுதாவளை கலாசார மண்டபத்தில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X