2025 மே 06, செவ்வாய்க்கிழமை

களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு ஜெய்க்கா குழு விஜயம்

Niroshini   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு ஜெய்க்கா திட்ட பணிப்பாளர் அடங்கிய குழுவொன்று விஜயம் ஒன்றினை மேற்கொண்டு வைத்தியசாலையில் இடம்பெற்று வரும் அபிவிருத்தி வேலைகளை பார்வையிட்டதுடன் எதிர்காலத்தில் வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் சம்மந்தமான கலந்துரையாடல் ஒன்றினையும் இன்று வியாழக்கிழமை காலை  நடத்தியுள்ளார்.

வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணனுக்கும், ஜெய்க்கா திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் நியோமி மாணி, ஜப்பான் சென்மேரிஸ் வைத்தியசாலையின் ஆய்வுகூடப் பொறுப்பாளர் கிரோகிஜமாசாகி ஆகியோர் அடங்கிய குழுவினருக்கும் இடையிலேயே இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, வைத்தியசாலையில் எதிர்காலத்தில் மருந்துத் தட்டுப்பாடு ஏற்படா வண்ணம் எவ்வாறான பொறிமுறைகளை கையாளுதல், அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்தல், பிரதேசத்தில் காணப்படும் எட்டு வைத்தியசாலைகளை ஒன்றிணைத்து ஆய்வுகூட வசதியினை ஏற்படுத்தல் சம்பந்தமாக கலந்துரையடாப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X