2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

களுதாவளை பிள்ளையார் கோவில் வழிபாடுகள் இடைநிறுத்தம்

Princiya Dixci   / 2021 மே 02 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு, களுதாவளை பிள்ளையார் கோவிலின் விசேட பூஜைகள், சங்காபிசேகம், திருமணங்கள் மற்றும் நேர்த்திக் கடன்கள் போன்ற அனைத்து வழிபாடுகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கோவில் பரிபாலனசபை தலைவர் க.பாஸ்கரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, பஸார் வீதியிலுள்ள கிழக்கு ஊடக மன்றத்தில் நேற்று (01)  நடைபெற்ற ஊடகவியலாள் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலையடுத்து இந்தத் தீர்மானத்தை நிர்வாக சபை எடுத்துள்ளது.

இதற்கு அமைய கோவிலின் நித்திய பூஜை தவிர்ந்த ஏனைய விசேடபூஜைகள். சங்காபிசேகம், திருமணங்கள் மற்றும் நேர்த்திகடன்கள் பொங்கல்கள் உட்பட அனைத்து பூஜைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்தாக கோவில் பரிபாலனசபை தலைவர் தெரிவித்தார்

எனவே, பக்தர்கள் கோவிலுக்கு வருவதை முற்றாகத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X