2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

களுவாஞ்சிகுடியில் பெண் கொலை

Editorial   / 2020 ஜூன் 28 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 வ.சக்தி

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக குடும்பப் பெண்ணொருவர், இன்று(28) காலை 6 மணியளவில் கொலை செய்யப்பட்டுள்ளாரென, களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலய வீதியில் வசித்து வந்த இரு பிள்ளைகளின் தாயான துர்க்கா (34 வயது) என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவராவார்.

உயிரிழந்த பெண்ணின் கணவர், களுவாஞ்சிகுடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட குடும்பத் தகறாறு காரணமாக, தனது மகளை மருமகனே கொலை செய்துள்ளார் என உயிரிழந்த பெண்ணின் தாயாரான தேவநேசராசா சாந்தநிதி பொலிஸில் முறையிட்டுள்ளார்.

ஸ்தலத்துக்கு விரைந்த களுவாஞ்சிகுடி பெலிஸாரும், மட்டக்களப்பு தடயவியல் பொலிஸ் பிரிவும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .