2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி திடீர் மரணம்

Princiya Dixci   / 2020 நவம்பர் 01 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா, எம்.எஸ்.எம்.நூர்தீன், வ.சக்தி, வா.கிருஸ்ணா, பி.எம்.எம்.ஏ.காதர், க.விஜயரெத்தினம்

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.கிருஷ்ணகுமார் (60 வயது), இன்று (01) தீடிரென உயிரிழந்துள்ளார் என உறவினர்கள் தெரிவித்தனர்.

அதிகாலை 12.30 மணி வரைக்கும் களுவாஞ்சிகுடி பகுதியில், கடமையில் ஈடுபட்டிருந்த அவர், பாண்டிருப்பில் அமைந்துள்ள அவரது வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில், திடீர் சுகயீனம் ஏற்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அதிகாலை 03 மணியளவில் உயிரிழந்துள்ளார். சடலம், கல்முனை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

 உயிரிழந்த வைத்திய அதிகாரிக்கு  மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .