Freelancer / 2023 செப்டெம்பர் 16 , பி.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மகளூரில் வீட்டில் இருந்த 15 வயது சிறுமி ஒருவர் நேற்று (15) காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரமேஸ்குமார் கிரிஸ்டிகா என்ற 15 வயது சிறுமி, வீட்டில் பெற்றோர் கஸ்டப்படுவதாகவும், தங்களை பார்க்க முடியாத நிலையில் இருப்பதாகவும், என்னை பார்க்க கூடிய சிங்கள வீடு ஒன்றுக்கு செல்வதாக நேற்று கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த சிறுமியின் தந்தையர் மேசன் தெரிலை செய்துவருவதாகவும், மூத்த சகோதரன் திருமணம் முடித்து சென்றுள்ளதாகவும் சிறுமியும், சகோதரன் ஒருவர் உட்பட இருவர் பெற்றோருடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பெற்றோர் கஸ்டபட்டு வருவதாகவும் தந்தையாரின் தாயாரான அப்பம்மா மற்றும் உறவினர்கள் மாத்தளையில் வசித்து வருவதாகவும் கடந்த 2 வருடங்களாக சிறுமி அப்பம்மாவுடன் இருந்து வந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாணையில் தெரியவந்துள்ளது.
காணாமல் போன சிறுமி தொடர்பாக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பெரும் குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். R
7 hours ago
03 Feb 2026
03 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
03 Feb 2026
03 Feb 2026