2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கழிவுகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

Niroshini   / 2015 நவம்பர் 04 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான் குடி நகரசபை பிரிவுக்குட்பட்ட ஏ எல் எஸ் எல் மாவத்தையில் காத்தான்குடி நகரசபை சுகாதார தொழிலாளிகள் அப்பகுதியில் உள்ள திண்மக்கழிவுகளை அகற்ற மறுத்து தொடர்ச்சியாக புறக்கணித்து வருவதைக்கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று காலை காத்தான்குடி ஆறாம் கறிச்சி அலியார் சந்தியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் இப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட ஓரு பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குப்பைகளை  இங்கு காத்தான்குடி நகர சபை சுகாதார தொழிலாளிகள் அகற்றுவதற்கு மறுப்பு தெரிவித்து புறக்கணிப்பதாகவும் உடனடியாக இதை காத்தான்குடி நகர சபை கவனத்திற் கொண்டு குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்பபாட்டத்தில் ஈடுபட்டோர் வேண்டுகோள் விடுத்தனர்.

இது தொடர்பாக காத்தான்குடி நகர சபையின் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது,

இங்கு உடனேயே திண்மக்கழிவுகளை அகற்றியதாகவும் இதையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X