எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2020 ஜனவரி 02 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள காத்தான்குடி கல்விக் கோட்டத்தில், புதிய பாடசாலையொன்று, ஆரையம்பதி, சிகரம் கிராமத்தில் இன்று (02) திறந்து வைக்கப்பட்டது.
“சேர் ராசீக் பரீட் வித்தியாலயம்” எனும் பெயருடைய இப்புதிய பாடசாலையை, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார்.
இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எஸ்.உமர் மௌலானா, காத்தான்குடி கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே.ஹக்கீம் மற்றும் மண்முனைப் பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வியலுவலக அதிகாரிகள் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், சிகரம் ஜும்ஆப்பள்ளிவாசலின் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்தப் பாடசாலை, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் 77ஆவது பாடசாலையாகவும் காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் 33ஆவது பாடசாலையாகவும் உள்ளது.
8 hours ago
8 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
08 Apr 2026