2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

காத்தான்குடி மீடியா போரத்தின் புதிய நிர்வாகத் தெரிவு

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 05 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி மீடியா போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டம், போரத்தின் தலைவர்  எம்.எஸ்.எம். நூர்தீன் தலைமையில் நேற்று (04) நடைபெற்றது.

இதன்போது, நடப்பாண்டுக்கான காத்தான்குடி மீடியா போரத்தின் புதிய நிர்வாகத் தெரிவு நடைபெற்றது.

புதிய தலைவராக ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.சஜி தெரிவுசெய்யப்பட்டதோடு, செயலாளராக மீண்டும் எம்.ரீ.எம்.யூனுஸ், பொருளாளராக எம்.கே.பழீலுர் ரஹ்மான் தெரிவு செய்யப்பட்டனர்.

உப தலைவர்களாக எம்.எஸ்.எம்.நூர்தீன், எம்.ஐ.அப்துல் நஸார் ஆகியோர் தெரிவுசெய்யபட்டதுடன், தகவல் பணிப்பாளராக எம்.பஹத் ஜுனைட், உதவிச் செயலாளராக ஏ.எல்.ஆதிப் அஹமட் தெரிவுசெய்யபட்டனர்.

இதன்போது காத்தான்குடி மீடியா போர அங்கத்தவர்களுக்கான ஊடக அடையாள அட்டையும் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் பின்னராக புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட எம்.எஸ்.எம்.சஜி, எதிர்காலத்தில் சிறப்பான செயற்பாடுகளை முன்னெடுக்க ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும் என தனதுரையில் வேண்டுகோள் விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .