2025 மே 09, வெள்ளிக்கிழமை

காத்தான்குடி வர்த்தகருக்கு கௌரவம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தhல் சிறந்த வர்த்தகருக்கான கௌரவ கலாநிதிப் பட்டம் பெற்றமைக்காக, காத்தான்குடியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் கலாநிதி ஏ.எம்.உமர் அஸீம், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பைத்துஸ் ஸகாத் நிறுவனத்தால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.

இந்த வைபவம், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன மண்டபத்தில், நேற்று (07) இரவு நடைபெற்றது.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பைத்துஸ் ஸகாத் நிறுவனத்தின் தலைவர் எம்.ஐ.அப்துல் கபூர் மதனீ தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் எம்.சி.எம்.ஏ.சத்தார், பைத்துஸ் ஸகாத் நிறுவனத்தின் செயலாளர் சட்டத்தரணி ஏ.உவைஸ் உட்பட சம்மேளன முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X