Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 10 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, கொரோனா சிகிச்சை நிலையமாக சுகாதார திணைக்களத்தால் உள்வாங்கப்பட்டதையடுத்து, வைத்தியசாலையின் சில பிரிவுகள், காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ்; மண்டபம், காத்தான்குடி நகர சபையின் பழைய கட்டடம் என்பவற்றுக்கு, தற்காலிகமாக மாற்றப்பட்டு வருகின்றன.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இயங்கி வந்த வெளிநோயாளர் பிரிவு, குழந்தை பிரசவ விடுதி, கிளினிக் ஆகிய சேவைகள், மேற்படிக் கட்டடங்களுக்கு, இன்று (10) மாற்றப்பட்டன.
காத்தான்குடி நகரசபை, இந்தக் கட்டிடங்களை வழங்கியுள்ளதாக, நகரசபையின் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.
குருதி சுத்திகரிப்பு பிரிவு, உள நல மருத்துவப்பிரிவு என்பன, காத்தான்குடி வைத்தியசாலைக் கட்டடத்திலேயே இயங்கும் என்று, வைத்தியசாலையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர், காத்தான்குடி நகரசபையின் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர், வைத்தியர்கள், ஊழியர்கள், நகர சபை ஊழியர்கள் இணைந்து, விடுதி பிரிகளை மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago