2025 மே 22, வியாழக்கிழமை

காத்தான்குடியில் 13 பேருக்கு டெங்கு

Editorial   / 2017 செப்டெம்பர் 18 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன் ரீ.எல்.ஜவ்பர்கான்

 

காத்தான்குடியில் கடந்த 1ஆம் திகதி முதல்  இன்று வரை, சுமார் 13  டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனரென, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

காய்ச்சல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 13 பேருக்கு டெங்கு என உறுதிப்படுத்தப்பட்டு, காத்தான்குடி சுகாதார வைத்திய அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதெனவும் அவர் கூறினார்.

காத்தான்குடி முதலாம் குறிச்சி, காத்தான்குடி ஸாவியா வீதி, புதிய காத்தான்குடி மற்றும் பதுறியா வீதி போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களே, இவ்வாறு டெங்கு பாதிப்புக்குள்ளானவர்கள் எனவும் இங்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் பிரதேச மக்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதெனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .