2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

காத்தான்குடியில் 6 குடும்பங்கள் தனிமைப்படுத்தல்

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 12 , பி.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன் 

காத்தான்குடியில் 06 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 

கம்பஹா மாவட்டம் உட்பட கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் இருந்து காத்தான்குடிக்கு வந்த 05 பேரும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவருமாக 06 பேரும், அவர்களது குடும்பங்களுமே இவ்வாறு சுய தனிமைப்படுத்தப்பட்டு  உள்ளனர். 

இவர்களின் வீடுகளுக்குச் சென்ற காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள், அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதுடன், கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வுகளை அவர்களுக்கு வழங்கி, குடும்பத்துடன் சுய தனிமைப்படுத்தியுள்ளனர்.  

இவர்களை, பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை, கம்பஹா மாவட்டம் உட்பட, கொரோனா அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் இருந்து, காத்தான்குடிக்கு வருபவர்கள் தங்களைக் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலோ அல்லது காத்தான்குடி சுகாதார வைத்தியர் அலுவலகத்திலோ, காத்தான்குடி நகர சபைக்கோ தெரியப்படுத்தி, பதிவு செய்துகொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .