Suganthini Ratnam / 2017 ஜூலை 16 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடிப் பிரதேசத்தில்; குடும்பப் பிணக்கொன்றை சமரசம் செய்துகொண்டிருந்த வேளையில் ஏற்பட்ட கைகலப்பால்; காயமடைந்த இருவர், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்த 26 வயதுடைய கணவனுக்கும் 22 வயதுடைய மனைவிக்கும் இடையில் பிணக்கு ஏற்பட்டிருந்தது.
இப்பிணக்கைச் சமரசம் செய்து வைக்கும் நடவடிக்கையில், காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களினுடைய சம்மேளனத்தின் திருமணம் சம்பந்தமான பிணக்குகளைச் சமரசம் செய்து வைக்கும் குழுவினர் சனிக்கிழமை (15) ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, மனைவியின் தந்தைக்கு அவரது கணவன் தாக்கிய நிலையில், கணவனின் உறவினர் ஒருவருக்கு மனைவியின்; உறவினர்கள் தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த மனைவியின் தந்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும், மற்றையவர்; காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கைகலப்புச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
5 minute ago
8 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
8 minute ago
15 minute ago