ரீ.எல்.ஜவ்பர்கான் / 2018 ஏப்ரல் 11 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி நகர சபை பிரிவில் டெங்கு நுளம்பு பெருகக் கூடிய வகையில் வீடுகள் மற்றும் சுற்றுப்புறச் சூழலை அசுத்தமாக வைத்திருந்த 18 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் யு.எல்.நஸீர்தீன், இன்று (11) தெரிவித்தார்.
கடந்த ஐந்து நாட்களாக காத்தான்குடி நகர சபைப் பிரிவில் வீடுகள், பாடசாலைகள், வணக்கஸ் தளங்கள், காணிகள் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு சோதனை நடவடிக்கையின் போதே, டெங்கு நுளம்பு பெருகக் கூடிய வகையில் சூழலை அசுத்தமாக வைத்திருந்த 18 பேருக்கு எதிராக இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 183 பேருக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதென, அவர் குறிப்பிட்டார்.
காத்தான்குடி சுகாதார வைத்தியர் அலுவலகம், காத்தான்குடி நகர சபை ஆகிய இணைந்து மேற்கொண்ட இந்த டெங்கு சோனை நடவடிக்கையில், காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்களும் பொலிஸாரும் ஈடுபட்டனர்.
இவர்கள் குழுக்களாகப் பிரிந்து 2,768 இடங்களைச் சோதனை செய்தனர்.
இதில் டெங்கு நுளம்பு பெருகக் கூடிய வகையில் வீடுகள், பாடசாலை, சுற்றுப்புறச் சூழலை அசுத்தமாக வைத்திருந்த 18 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கென, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இவர்கள் மீது வழக்குகள் தாக்கல் செய்யவுள்ளன.
மேலும், சில வீட்டு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த டெங்கு சோதனையின் போது, டெங்கு தொடர்பான விழிப்பூட்டல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago