2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

காத்தான்குடியில் நூல் வெளியீடு

Freelancer   / 2023 பெப்ரவரி 05 , பி.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம் நூர்தீன்

எம்.ஏ.சி.எம் ஜவஹீர் ஆசிரியர் எழுதிய ‘ஈழப் பிரிவினைப் போர் - காத்தான்குடி சமூகத்தின் மீது ஏற்படுத்திய பாதிப்புகளும் கோரிக்கைகளும்’ எனும் நூல் வெள்ளிக்கிழமை (03) காத்தான்குடி அல்மனார் மண்டபத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், றைஸ் ஸ்ரீ லங்கா ஆகிய நிறுவனங்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு வைபவத்துக்கு றைஸ் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் செயலாளரும் பனிப்பாளருமான சட்டத்தரணி ஏ. உவைஸ் தலைமை வகித்தார்.

வைபவத்தில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களில் செம்மேளனத்தின் தலைவர் ரவூப் ஏ மஜீத், ரைஸ் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தவிசாளர் முஹம்மத் நவாஸ் உட்பட உலமாக்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

நூல் ஆய்வுரையை சிராஜ் மசூர் நிகழ்த்தினார். நூலாசிரியர் எம் ஏ சி எம் ஜவாஹிர் ஆசிரியர் நூலை வெளியிட்டு வைத்து, அதன் பிரதிகளை வைபவத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் வழங்கி வைத்தார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X