Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2020 ஒக்டோபர் 28 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடியிலுள்ள அனைத்து பள்ளிவாயல்களையும், இன்று (28) தொடக்கம் மூடுவதென, காத்தான்குடி பிரதேச கொரோனா வைரஸ் தடுப்பு செயலணி தீர்மானித்துள்ளது.
காத்தான்குடி பிரதேச கொரோனா தடுப்பு செயலணியின் அவசரக் கூட்டம், காத்தான்குடி சுகாதார அலுவலகத்தில், இன்று (28) நடைபெற்றது. இதன்போதே, இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், காத்தான்குடியிலுள்ள சிகை அலங்கார நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதெனவும் ஹோட்டல்கள், சிற்றுண்டிச் சாலைகளில் அமர்ந்திருந்து உணவருந்துவதை நிறுத்துவதுடன், பார்சல் செய்து கொடுக்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் டெங்கு நுளம்பு பரவும் அபாயமும் உள்ளதால், அது தொடர்பாக மக்களை விழிப்பூட்டுவதெனவும் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago