Freelancer / 2023 மே 08 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம் நூர்தீன்
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் வேலைத் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (08) நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய சிறீதர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எம.ஜரூப், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி பத்மா ஜெயராஜ், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது உணவுப் பாதுகாப்புத் தொடர்பான ஆய்வு நடவடிக்கை முன்னேற்றம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
உணவுப் பாதுகாப்புத் தொடர்பான விண்ணப்பங்களை பூர்த்தி செய்யாத உத்தியோகத்தர்கள் விரைவாக இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்யுமாறு, பிரதேச செயலாளர் உதய சிறீதர் அறிவுறுத்தல்களை வழங்கினார். (N)
30 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago