Princiya Dixci / 2020 நவம்பர் 24 , பி.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி நகர சபை பிரிவில், மேலும் 100 பேருக்கான பிசிஆர் பரிசோதனை மாதிரிகள், காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டரங்களில் இன்று (24) பெறப்பட்டன.
கொழும்பிலிருந்து வந்த ஆரையம்பதி, ஒள்ளிக்குளத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு கடந்த வியாழக்கிழமை கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அந்தப் பெண்ணுடன் தொடர்புபட்ட ஆரையம்பதி பிரண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலையில் தொழில்புரியும் பெண்கள் சிலருக்கும் அப்பெண் பயணித்த ஓட்டோவின் சாரதி, மேல் மாகாணத்திலிருந்து வந்த சிலருக்கும் தனிமைப்படுத்தலில் இருக்கும் சிலருக்குமாக 100 பேருக்கு இதன்போது அவர்களின் பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டன.
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஆசாத் ஹசன், காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் ஆகியோரின் முன்னிலையில், பொதுச் சுகாதார பரிசோதகர்களால் மாதிரிகள் பெறப்பட்டன.
இவர்களின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்படவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
42 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago